அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ளார்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (20) பதவியேற்கவுள்ளார்.
வழக்கமாக, அமெரிக்க ஜனாதிபதிகள் வொஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே பதவியேற்பது வழமை. ஆனால் வொஷிங்டன் தலைநகரை தாக்கியுள்ள கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, பதவியேற்பு விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, கலந்துகொள்ளும் அனைவரின் பாதுகாப்பிற்காக பதவியேற்பு விழா மண்டபத்தில் நடைபெறும் என்று டிரம்ப் தனது சமூக ஊடக கணக்குகளில் அறிவித்துள்ளார்.
முன்னதாக 1985 இல் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் பதவியேற்பு இதேபால இடம்பெற்ற வரலாற்றை கொண்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், பைபிளை கை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றிபெற்ற போது , தனது இரண்டாவது துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸை தேர்ந்தெடுத்தார்.
பதவியேற்பு விழாவிற்கு ட்ரம்ப் மற்றும் அவரது துணைவியார் மெலனியாவை பதவி விலகும் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அழைத்துச் செல்வார்கள்.
ட்ரம்ப் முன்னர் 2017 முதல் 2021 வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் ட்ரம்ப் தோல்வியடைந்தார். பின்னர் டரம்பிற்கு இன்னும் ஒரு முறை பதவி வகிப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் நவம்பர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
கமலா ஹாரிஸ்
பதவி விலகவுள்ள தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவரும் இன்று (20) பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள்.
கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹாரிஸ் டிரம்பின் போட்டியாளராக காணப்பட்டார்.
குறித்த நிகழ்வில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக, சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங், அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவி மில்லே, முன்னாள் பிரேசில் ஜனாதிபதி யார் போல்சரானோ, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற உதவிய உலகின் முதல்நிலை பில்லியனர் எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க வணிகத் தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |