அமெரிக்காவின் புதிய வரியின் எதிரொலி! இலங்கையில் கடுமையாக பாதிக்கவுள்ள தொழில் துறை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை
ஆடைத் தொழிற்துறை அத்துடன் அமெரிக்காவின் புதிய வரி காரணமாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து உரியத் தீர்வை பெற்று தருவது அவசியமாகும் என கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு உரியப் பதிலை வழங்கும் எனத் தான் நம்புவதாகச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.