ட்ரம்ப் கைவிட்டாலும் ஜூலி சங் இலங்கையை கைவிடவில்லை..
நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் அமைச்சில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
சுகாதார சேவைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல்
இந்த சந்திப்பின்போது மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகள் வழங்குவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது அமெரிக்க தூதுவர் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
நாட்டில் இலவச சுகாதார சேவை மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குக் குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களைத் தயாரிப்பது, இந்த திட்டங்களை எவ்வாறு ஆரம்பிப்பது, அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு முறைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த நோய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமெரிக்கத் தூதரிடம் விளக்கினார்.