இலங்கைக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய வரி
இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரியை 30 சதவீதமாக குறைத்திருப்பது நல்ல சூழ்நிலை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
எனினும் குறைந்தபட்சம் 05 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால் அது இன்னும் நன்மை பயக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த 30 சதவீத வரி விதிப்பு என்பது இலங்கைக்கு இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத ஒரு வரியாகும். அந்த வரியை நாம் எதிர்கொண்டு அதற்கு பணம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் வரிகள் விதிக்கப்பட்டு மாற்றப்படும் சூழ்நிலை உள்ளது.
நாடுகள் மீது வரி
எனவே உறுதியாக எதையும் சொல்ல முடியாது. அமெரிக்கா இன்னும் நாடுகள் மீது வரிகளை விதித்து வருகின்றது.
அத்தகைய வரிகளை விதிப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். அமெரிக்காவில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் வர்த்தக பற்றாக்குறை உள்ளது.
வரி அதிகரிப்பு
அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எங்களை போன்ற நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாகவும், அமெரிக்காவில் வரிகள் விதிக்கப்படுவதால் நமக்கு ஏற்படும் பொருளாதார சிரமத்தை தவிர்க்க புதிய சந்தைகளுக்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் ஆடைத் துறையை பார்த்தால், சுமார் மூன்றரை மில்லியன் மக்கள் நேரடியாக வேலை செய்கிறார்கள், சுமார் ஒரு மில்லியன் மக்கள் மறைமுகமாக அதனை சார்ந்துள்ளனர். வரி அதிகரிப்பு அவர்களை பாதிக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
