மோடிக்கு டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை – இலங்கைக்குள் நுழையும் இந்திய இராணுவத் தளபதி
ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் தொடர்ந்தால் கூடுதல் வரிகளை விதிப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும். என்னை மகிழ்விப்பது மிகவும் முக்கியமானது.
ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்யட்டும். எங்களாலும் உடனடியாக வரிகளை உயர்த்திவிட முடியும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அதிகமான வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தால் கூடுதல் வரிகளையும் விதித்து நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். தற்போது இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட சிரேஸ்ட இராணுவ மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
இவை தொடர்பான மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |