ரஷ்யா மீதான தடைகளை தளர்த்திய தமது முடிவை நியாயப்படுத்தினார் ட்ரம்ப்: ஸெலென்ஸ்கி மீது குற்றச்சாட்டு
ரஷ்யா மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்த தனது முடிவை நியாயப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
டிரூத் சோஷியல் தளத்தில் ட் ரம்ப் இதனை பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ரஷ்யாவை இந்த பேச்சுவார்த்த மேசையிலிருந்து தூர விலக்கும் வகையில் முட்டாள்தனமாக எதையும் செய்ய நான் விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
தாக்குதல்
ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது உலகளாவிய டீசல் சந்தையைப் பாதிக்கும் என்பதை அறிந்தும், ஸெலென்ஸ்கி அதைப் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவது உக்ரைனைப் பாதிப்பதுடன், ஜனாதிபதி புடினின் போர் முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவானது
புடினையும் என்னையும் ஒப்பிட முடியாது; அவர் ஒரு ஆக்கிரமிப்பாளர், எங்கள் மக்களைக் கொன்ற ஒரு பயங்கரவாதி. இந்த விடயத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ள இந்த நடவடிக்கை, ட்ரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி இடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.