கிளிநொச்சி மக்களின் ஒற்றுமையை குழப்ப வேண்டாம் - அன்னராசா வேண்டுகோள்

Jaffna Kilinochchi Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 27, 2023 01:07 PM GMT
Report

மக்கள் பாரம்பரியமாக தொழில் செய்யும் கடற்பரப்பில் சீன கடல் அட்டைப்பண்ணையை விதைப்பதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மீனவ மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்தார்.

 பாசையூர் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (26.07.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டித்தலை கடற்பகுதியில் சிறகு வேலைத் தொழிலில் ஈடுபட்ட பாசையூர் மற்றும் குருநகர் சிறகு வலை தொழிலாளர்களின் வலைகளை கிளிநொச்சி நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி பிடுங்கியுள்ளனர்.

சிறகுவலைத் தொழில்

கிளிநொச்சி மக்களின் ஒற்றுமையை குழப்ப வேண்டாம் - அன்னராசா வேண்டுகோள் | Don T Unity Affna Kilinochchi People Chinese Farm

150 வருட காலமாக பரம்பரை பரம்பரையாக சிறகுவலைத் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் குறித்த அதிகாரிகள் செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எமது பாரம்பரிய மீனவர்களின் கடற்பரப்புகளை தொழில் முறைகளில் இருந்து அகற்றி சீனாவுக்கு முழுக் கடலையும் தாரைவார்க்கப் போறீர்களா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் பரம்பரை பரம்பரையாக சிறகுவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்திணைகள உயர் அதிகாரி நேரடியாக சென்று சிறகு வலைகளை பிடுங்கியுள்ளார் .

இவ்வாறு பிடுங்கிய கிளிநொச்சி மாவட்ட கடற் தொழில் நீரியல் வள அதிகாரியிடம் பாசையூர் மற்றும் குருநகர் சிறகுவலைத் தொழிலாளர்கள் நேரடியாகச் சென்று கேட்டபோது அதிகாரத் துணிவில் நான் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என கூறுகிறார்.

சிறகு வேலை தொழிலுக்கு அனுமதி எடுக்க வேண்டுமானால் குறித்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கி இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த பகுதி மீனவ சங்கங்களுக்கு அல்லது யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு அறிவித்திருக்க வேண்டும். குறித்த பகுதியில் முறையற்ற சிறகு வலைகள் இருப்பதால் அதை அகற்றுமாறு கூறி இருக்க வேண்டும்.

கால அவகாசம் வழங்காமல் தான் நினைத்தபடி மக்களின் வாழ்வாதாரத்தை கண்டு கொள்ளாமல் கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத் திணைக்களம் அதிகாரி செயற்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் விரும்பினால் சீனாவுக்கு செல்லலாம் ஆனால் எமது மக்கள் பாரம்பரியமாக செய்து வரும் சிறகு வலைத் தொழிலை எமது கடற் பரப்பிலே செய்ய வேண்டும்.

மக்கள் ஒற்றுமை

கிளிநொச்சி மக்களின் ஒற்றுமையை குழப்ப வேண்டாம் - அன்னராசா வேண்டுகோள் | Don T Unity Affna Kilinochchi People Chinese Farm

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மீனவ மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி சீன அட்டப்பணையை கடலில் விதைப்பதற்கான நடவடிக்கையை குறித்த அதிகாரி மேற்கொள்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ் அமைச்சர் இருக்கிறார் தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள் ஏன் இந்த மக்களுக்கு சிறகுவலை தொடர்பில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனை விடுத்து அரசியல்வாதிகளை எடுபிடியாக செயற்பட்டும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் எமது வளமான எமது கடற்பரப்பை சீன அட்டைப் பண்ணைக்காக தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிடுங்கப்பட்ட பாசையூர் குருநகர் சிறகு வலை தொழிலாளர்களின் வலைகளை மனிதாபிமான முறையில் அந்த மக்களிடம் திருப்பி வழங்குவதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களை இணைத்து எமது மீனவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US