கோவிட் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் - அமைச்சரவை இணைப் பேச்சாளர்
புத்தாண்டு பண்டிக்கை காலத்தின் பின்னர் நாட்டின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை சம்பந்தமாக மக்கள் வீணான அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டியதில்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தொற்று பரவல் நிலைமையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கமும், சுகாதார பிரிவினரும், உன்னிப்பாக அவதானித்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் நிலைமை மோசமாவதை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். புத்தாண்டுக்கு முன்னரும், சுகாதார பிரிவினரும், கோவிட் பரவல் தடுப்பு செயலணியும் எச்சரிக்கை விடுத்திருந்தன. எனினும் சில இடங்களில் சுகாதார ஆலோசனைகள் மீறப்பட்டன.
கோவிட்வின் முதலாம், இரண்டாம் அலைகளை சிறப்பாக கட்டுப்படுத்திய சுகாதார பிரிவினருக்கு தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த முடியும்.
இந்த நோய் அதிகளவில் பரவும் கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், நோய் பரவும் ஆபத்து குறைந்துள்ளது எனவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam