பாணி மருந்தில் சிக்கி இருக்காது உடனடியாக ஊசி மருந்தை இறக்குமதி செய்யுங்கள்! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவென ஆலயம் ஒன்றின் பூசாரி எனக் கூறப்படும் நபரின் பாணி மருந்தில் சிக்கி இருப்பதற்குப் பதிலாக அரசாங்கம் கூடிய விரைவில் ஊசி மருந்தை நாட்டுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
செய்ய வேண்டிய வேலைகளைப் புறம் ஒதுக்கி வைத்து விட்டு, செய்யக்கூடாத வேலைகளில் சிக்கிக் கொண்டிருப்பதே தற்போது நடைபெறுகிறது.
நோய் ஒன்று குணமடைந்தால் நல்லது. ஆனால் பாணியில் குணமடையுமா என்பதை விஞ்ஞான ரீதியான பரிசோதனை செய்து தீர்மானிக்க வேண்டும்.
பாணியால் குணமடையாது போனால் என்ன செய்வது, இதனால் குணமடையும் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அதனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri