தமிழ்த் தேசியத்தை அழிக்காதே..! மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை
தமிழ் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பதாதையை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர்.
கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (28) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இப்பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் குறித்த பதாதையை பார்வையிட்ட பின்னர் கூட்ட மண்டபத்திற்குள் சென்றிருந்தனர்.
குறித்த பதாதையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச்சபையை உடனடியாக கூட்டு, யாப்பின் படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை இயங்கவிடு, மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே என்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam