ரணிலின் முயற்சியை குழப்ப வேண்டாம்: முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை குழப்பாமல் அதைத் தொடர வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் வினவியபோதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது" எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றையநாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri