போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவும்! ஹேமந்த ஹேரத்
போலிப் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடாது தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி ஏற்றுகை உடல் நலனை பாதிக்கும் என சிலர் செய்யும் பிரச்சாரம் அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் போலித் தகவல்களை மக்கள் நம்பத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கீகரிக்கப்பட்டவை என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam