தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளால் பீதியடைய வேண்டாம் - செய்திகளின் தொகுப்பு
சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த தகவல் அந்தந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல். கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பீதியடைய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல - போப்பிட்டிய - தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை அதிகாரிகள் சிலரால் தேவாலயத்திற்கு நேரில் சென்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்த வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri