சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos)

Nuwara Eliya SL Protest
By Malaivanjan Jun 16, 2022 11:39 AM GMT
Report

எமது நாட்டில் நாடாளவிய ரீதியில் வீடுகளில் பணிபுரியும் வீட்டுவேலை பணியாளர்களின் தொழில் உரிமைகளை உறுதி செய்யக்கோரியும் விலையுயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினமான இன்று இப் போராட்டம் ஒன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் 

சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos) | Domestic Workers Who Went On Strike For Attention

வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலை பணியாளர்கள் தங்களின் உரிமைகளைச் சட்டமாக்குமாறும், தொழில் பாதுகாப்பு பெற்றுக்கொடுக்குமாறும், சர்வதேச தொழில் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சி 189 2011 உருவாக்கப்பட்ட சாசனத்தினை நடைமுறைப்படுத்துமாறும், பொருட்களின் விலை அதிகரிப்புக்கேற்ப சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும், துஷ்பிரயோகம், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டுமென்றும் வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் ஹட்டன் மல்லியைப்பூ சந்தியிலிருந்து ஆரம்பித்து“சகல நுண் கடன்களையும் ரத்தச்செய்”, ”வீட்டுப் பணியாளர்களை விற்பனை செய்வதனை நிறுத்து”, ”வீட்டு வேலை தொழிலாளர்களின் தொழில் உரிமையினை வென்றெடுப்போம்” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டு ஹட்டன் நகர் ஊடாக சென்று ஹட்டன் தொழில் திணைக்களம் வரை சென்று மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். 

சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos) | Domestic Workers Who Went On Strike For Attention

ப்ரொட்டெக்ட் தொழிற்சங்கம் ஒழுங்கு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 200 இற்கும் அதிகமான வீட்டு வேலை தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இது குறித்து மாவட்ட அமைப்பாளர் கருப்பையா மைதிலி கருத்து தெரிவிக்கையில்,

”இன்று சர்வதேச பணியாளர்கள் தினம் என்பதனால் நாங்கள் அவர்களின் உரிமைகள் தொடர்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம்.

இதற்கு முக்கியமான காரணம் என்ன வென்றால் கடந்த வருடம் முன்னாள் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்டிருந்தோம். அதில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos) | Domestic Workers Who Went On Strike For Attention

அதில் முக்கியமானவையாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சட்டமூல மறுசீரமைப்பு போன்ற விடயங்களை இந்த வருடத்திற்குள் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதே நேரம் அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் 

சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos) | Domestic Workers Who Went On Strike For Attention

ஆனால் இன்று அந்த விடயங்களுக்கு என்ன நடந்தது என்று கேள்விக்குறியாகவே உள்ளன. இன்று வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்குத் தொழில் பாதுகாப்பு கிடையாது முறையான சம்பள வழங்கப்படுவதில்லை.

அவர்களின் எந்த ஒரு பிரச்சினைக்கும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இன்று சுமார் 200 வருடங்களுக்கு மேல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் பணியாளர்களாக உள்ளார்கள்.

ஆகவே அவர்களின் தேவைகள் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய சட்டங்கள் போன்றவற்றினை தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர்கள் ஆகியோர் உடன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகக் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US