நாட்டின் உள்ளூர் நாணயக் கடன்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!
இலங்கையின் வெளிநாட்டுப் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், முறையான மறுசீரமைப்புப் பேச்சுக்களுக்கு வருவதற்கு முன்னர் நாட்டின் உள்ளூர் நாணயக் கடன்கள் குறித்த கூடுதல் தெளிவை விரும்புவதாக, ப்லூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூர் கடன்களை நிர்வகிப்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். இது வெளிநாட்டு பத்திரதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட கொடுப்பனவுகளைக் குறைக்கலாம் அல்லது மற்றொரு மறுசீரமைப்பு முயற்சிக்கு வித்திடலாம் என்றும் கடன் வழங்குநர்கள் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை வெளிநாட்டுப்பத்திரங்களை மறுசீரமைப்பு முயலும் அதேநேரம் உள்ளூர் நாணய கடன்களை முழுமையாக செலுத்தி வருவதை அடுத்தே இந்த தெளிவைப்பெற வெளிநாட்டு பத்திரகாரர்கள் முயல்வதாக ப்லூம்பேர்க் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி
இதற்கிடையில் இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு அனுமதி கிடைத்த பின்னரே, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஃபிடிலிட்டி இன்ஸ்டிடியூஷனல் அசெட் மேனேஜ்மென்ட் என்பது ப்ளூம்பெர்க்கிற்கு அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில் இலங்கையின் டொலர் பத்திரங்களில் முதலிடம் வகிக்கிறது, அதைத் தொடர்ந்து லோர்ட் அபெட் ரூ கோ. மற்றும் கெபிடல் குரூப் ஒஃப் கம்பனிகள் உள்ளன.
வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் செலுத்தப்பட மாட்டாது.
எனினும் உள்ளூர் கடப்பாடுகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதை
இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான்
சேமசிங்கவும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
