பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ்..! கடலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
விண்வெளியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) உள்ளிட்டோரை அழைத்து வந்த விண்கலம் டிராகன் கேப்சூல் கடலில் விழுந்ததும்,விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டொல்பின்கள் சூழ்ந்துள்ளன.
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62) இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ்
அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே கடலில் தரை இறங்கியது.
Dolhphins greet our austronout Sunita Williams#sunitawilliamsreturn #SunitaWilliams pic.twitter.com/vbxMyPci5F
— Viral News Vibes (@viralnewsvibes) March 19, 2025
பெரசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதனை தொடர்ந்து தற்போது அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
[6JWCI7H\
கிடைத்த பெருமை
இந்த நிலையில் நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டொல்பின்கள் சூழ்ந்தன.
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டொல்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது காணொளிகளில் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை நேரலை செய்துகொண்டிருந்த நாசா விஞ்ஞானிகள் அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று குறிப்பிட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
