இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் டொல்பின்கள்
மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்றுள்ளது.
இந்தநிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடி வருகிறது.
இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
அரிய காட்சி
இந்த அரிய காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு இரசித்தனர்.

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam