இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு! அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியில் பெரும் நெருக்கடி
இலங்கையில் அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெறுவதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் பாரியளவில் நட்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, டொலரின் பெறுமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இறக்குமதி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், நாட்டில் மீண்டும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்தியாவசிய நுகர்வுபொருள்களுக்கு தட்டுப்பாடு
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் டொலர் தொகையை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூபாய்வின் மதிப்பு திடீரென வலுப்பெறுவதால் டொலரில் அதிக விலைக்கு பதிவு செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நட்டத்தில் விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, வரும் ஆண்டுகளில் அத்தியாவசிய நுகர்வுபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.