இலங்கை பிரதிநிதிகளுடன் சாதகமான சந்திப்பு: தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் (Photos)
"நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் என். வீரசிங்க ஆகியோருடன் இன்று ஒரு நல்ல கலந்துரையாடலாக அமைந்ததாக தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விங் ஷாஃபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்புக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பது குறித்து இதன் போது விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.
அமெரிக்காவின் - வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நேற்று19ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Had a good meeting today with #SriLanka’s Finance Minister Ali Sabry and @CBSL Governor Weerasinghe, discussed actions to address the economic crisis, support stabilization and recovery, and protect the vulnerable people.
— Hartwig Schafer (@HartwigSchafer) April 19, 2022
[1/ pic.twitter.com/l40MJeGOjQ



