விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் டொலர் நெருக்கடிக்கு காரணம்! சிங்கள ஊடகம் தகவல்
விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும், தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடி நிலைக்கு காரணம் என சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் அமெரிக்க டொலர் கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்தமைக்கு விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்டியல் பணப் பரிமாற்றல் நடவடிக்கையும் ஓர் முக்கிய ஏதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து நாடுகளிலிருந்து இவ்வாறான புலம்பெயர் தமிழர்கள் உண்டியல் முறையில் இலங்கைக்கு பணப்பரிமாற்றல் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து உண்டியல் முறை பணப்பரிமாற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வங்கிகளில் வெளிநாட்டு நாணயங்களுக்கு வழங்கப்படும் தொகையை விடவும் கூடுதல் தொகை உண்டியல் முறையில் வழங்கப்படுகின்றது.
உண்டியல் முறையில் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உண்டியல் கொடுக்கல் வாங்கல்களின் பிரதான கேந்திர நிலையங்களாக லண்டன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியனவற்றை குறிப்பிட முடியும் என குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் முறையில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுவதனால் அரசாங்கத்திற்கு டொலர்கள் கிடைக்கப் பெறுவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.