ரூபாவின் பெறுமதி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி எதிர்வரும் காலங்களில் பாரியளவு பின்னடைவை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான சரிவிற்கு உள்ளாகும் என நிதி நிபுணர்களை ஆதாரம் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செயற்திறன் மிக்க நாணய அலகாக இலங்கை ரூபா காணப்படுகின்றது
உலகின் நாணய அலகுகளில் மிகவும் செயற் திறன் மிக்க நாணய அலகாக இலங்கை ரூபா காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தல் மற்றும் கடன் செலுத்துகை என்பன ஆரம்பிக்கப்பட்டதும் ரூபாவின் பெறுமதி குறித்த எதிர்காலம் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக 1.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
எனினும் இந்த ஆண்டு இறுதியளவில் ரூபாவின் பெறுமதி 350 ரூபாவாக உயர்வடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் ஆகிய ஏதுக்கள் தாக்கம் செலுத்தியதாக சுட்டிக்கட்டியுள்ளனர்.