ரூபா வீழ்ச்சியினால் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி! மேலும் வீழ்ச்சியை சந்திக்கலாம்..

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka Dollars
By Rakesh May 22, 2026 10:30 AM GMT
Report

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபா வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசைக் கையளிக்கும் போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சுமார் 292 ரூபாவாகக் காணப்பட்டது. ஆனால், தற்போதைய நிர்வாகம் பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், டொலரின் விலை 354 ரூபா வரை அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கடுமையான வாழ்க்கைச் செலவு

இந்தக் கட்டுப்பாடற்ற ரூபா வீழ்ச்சியானது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள ‘மிகவும் பாரதூரமான’ பிரச்சினையாகும். கடந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான பொருளாதாரக் கொள்கைகளைத் தற்போதைய அரசு தொடரத் தவறியமையே இந்நிலைக்குக் காரணமாகும்.

முறையான பொருளாதாரத் திட்டமின்மை மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்தத் தவறியமை போன்ற காரணிகளே அமெரிக்க டொலரின் மதிப்பு இந்த அளவுக்கு உயர்வதற்குக் வழிவகுத்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக்கூடும் எனத் தனியார் துறையின் பல பிரிவினர் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளனர்.

ரூபா வீழ்ச்சியினால் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி! மேலும் வீழ்ச்சியை சந்திக்கலாம்.. | Dollar Rate In Sri Lanka Today

ரூபா பலவீனமடைவதால் சில ஏற்றுமதித் துறைகள் தற்காலிகமாக அதிக வருமானத்தைப் பெற்றுப் பயனடைந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களும் பொதுமக்களும் இதனால் ஏற்படும் கடுமையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர்.

குறிப்பாக ஆடைத் தொழிற்றுறை போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகளில் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறுவதும் தற்போதைய உலகச் சூழலில் சாத்தியமற்றதாகும்.

ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் மந்தநிலை, சர்வதேச ஸ்திரமற்றதன்மை மற்றும் செங்கடல் தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணை விவகாரங்கள் காரணமாக உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் என்பன கப்பல் கட்டணங்களை அதிகரித்துள்ளன. இது இலங்கையின் ஏற்றுமதித் துறையைப் பாரதூரமாகப் பாதிக்கும்.

ரூபா வீழ்ச்சியை நேர்மறையான ஒன்றாகக் காட்டுமாறு அண்மையில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்த கருத்துக்களையும், அதற்கு கூட்டு ஆடை சங்கங்களின் ஒன்றியம் வழங்கிய பதில்களையும் ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக விமரிசித்துள்ளது.

ரூபா வீழ்ச்சியினால் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி! மேலும் வீழ்ச்சியை சந்திக்கலாம்.. | Dollar Rate In Sri Lanka Today

நாட்டின் ஆடைத் துறையினர் தங்களின் தற்காலிக இலாபங்களை மட்டுமே நோக்காகக் கொண்டு, பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மறைக்க முயல்வது ஏமாற்றமளிக்கின்றது.

இலங்கையில் ஆடைத் தொழிற்றுறையை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் கடந்த கால ஐக்கிய தேசியக் கட்சி அரசுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டமுமே இந்தத் துறையின் அடித்தளமாகும்.

எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் சுமையைத் தொழிலாளர்கள் மீது சுமத்த வேண்டாம் என ஏற்றுமதியாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசு உடனடியாக இந்தத் தற்காலிகக் கற்பனைக் கதைகளை நிறுத்திவிட்டு, நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பதற்கான உண்மையான மற்றும் நிலையான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற போது பலி

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற போது பலி


மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US