400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை
அமெரிக்க டொலர் 400 ரூபாய் வரை சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் இவ்வாறான நிலைமை தற்போது இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாற்றம் இல்லை என்று மக்களால் கூற முடியாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒன்றரை வருடத்துக்கு முன்னர், போராட்டம் நடக்கும் போது ஒரு லீட்டர் பெட்ரோலை 3000 ரூபாவுக்குக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது அந்த நிலைமையை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. கியூ.ஆர் குறியீடுகளை வைத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அளவிலும் வரம்பு இருந்தது.
இன்று அந்த நிலையை மாற்றி மக்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை வழங்கி வருகிறோம்.
டொலர் 400 ரூபாய்க்கு சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை.
இன்று இவ்வாறான நிலைமை இல்லை. எனவே, நாட்டில் மாற்றம் ஏற்படவில்லையென மக்களால் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |