இன்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி! மத்திய வங்கியின் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் (22.06.2023) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (22.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 240.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 225.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.86 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 327.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri