டொலரின் விலை 250 ரூபா! விலைவாசி குறைப்பு தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி(video)
இலங்கையில் பொருட்களின் விலை கூடுமே ஒழிய குறைவதில்லை என பொதுமகன் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய சமகால நிலவரம் குறித்து மக்களது எண்ணங்களை அறிந்து கொள்ள எமது அணியினர் மேற்கொண்ட கள ஆய்வின் போது பொதுமக்கள் அரசாங்கம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மற்றுமொரு பொதுமகன், டொலரின் விலை 350 ரூபாவில் இருந்தபோதும் அதே விலைவாசிதான், 250 ரூபாவாக குறைந்தபோதும் அதே நிலை தான் என சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் விலை கட்டுப்பாட்டுப் பிரிவு என்று ஒன்று இருக்கின்றதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கத்தின் மீதும் கடும் விமர்சனங்களை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். இது குறித்து முழுமையாக அறிய கீழ்வரும் காணொளியை பார்க்கவும்,