ஐ.எம்.எப் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கையில் குளறுபடி - தங்கம், டொலரில் ஏற்றம் இறக்கம் ஏன்..! (Video)
இலங்கை ரூபாவின் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தங்கம், டொலரில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அறிக்கையின் அடிப்படையில் அந்நிய செலாவணியில் ஏற்றம் இறக்கம் ஏற்படுகின்ற போது அவை தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய பரிமாற்றத்தில் எற்பட்ட குழப்பநிலையின் பின்விளைவாக புலம்பெயர் இலங்கையர் பணம் அனுப்புவதில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தில் ஸ்திரத்தன்மை இல்லாததால் பணம் அனுப்புபவர்களுக்கு நட்டம் ஏற்படுகின்றது.
அதாவது குறைந்த விலையில் நிதியை அனுப்ப முற்படுபவர்களுக்கு, விலை ஏற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. அதேவேளை விலை இறக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ரூபாவின் இந்த ஸ்திரத்தன்மை இல்லாத நிலை மக்கள் மத்தியிலும் பண பரிமாற்ற முகவர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
எந்த விலைக்கு நிதியை வாங்கலாம், விற்கலாம் என்ற தீர்மானத்தை எடுக்க முடியாமல் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.
இலங்கை ரூபாவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் போது தான் இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
