இலங்கை வர்த்தக வங்கிகளின் இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் சடுதியான மாற்றம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(12.06.2023) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 285.14 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலை 302.01 ரூபாவிலிருந்து 305.11 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 286.04 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன் இன்று 288.02 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 303 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 290 ரூபா மற்றும் 302 ரூபாவாக அதிகரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri