டொலரின் பெறுமதி 250 ரூபா! ஆட்சி கைமாறினால் ஏற்படப் போகும் மாற்றம்..
அரசாங்கத்தை தங்களிடம் கையளித்தால் ஒரு வருடத்திற்குள்ளாக டொலரின் பெறுமதியை 250 ரூபாவிற்குள் குறைப்பதாக முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமண உறுதியளித்துள்ளார்.
டொலரின் மதிப்பைக் குறைக்க முடியும்..
சர்வஜன பலய கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் சன்ன ஜெயசுமன, இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது, சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப எங்களிடம் ஒரு மாற்று வழி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் இனி நாட்டை ஆளத் தகுதியற்றது என்பதை உணர்ந்துவிட்டதால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுப் பதவி விலக வேண்டும்.
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் டொலரின் மதிப்பை 250 ரூபாயாகக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரகசியம் - நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam