மேலும் உயர்ந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(09.10.2023) டொலரின் பெறுமதியில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.63 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 349.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 334.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 403.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri