ஒரே நாளில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிவேக உயர்வு! டொலரின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(31.05.2023) மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இதற்கு முந்தை காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.
எனினும் நேற்றையதினம் அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(31.05.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 306.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 374.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
படத்தில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார்னு தெரியுதா? இளம்வயதில் எப்படி இருந்திருக்கார்னு பாருங்க Manithan
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan