இலங்கை வர்த்தக வங்கிகளின் இன்றைய நாணய மாற்று விகிதம்! ரூபாவின் பெறுமதியில் சடுதியான மாற்றம்
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், மக்கள் வங்கியின் மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி நிலையானதாக காணப்படுவதுடன், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.41 ரூபாவாகவும் மற்றும் விற்பனை விலை 339.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கி
இதேவேளை, கொமர்ஷல் வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றையதினம் 311.76 ரூபாவாகவும், விற்பனை விலை 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஹட்டன் நெஷனல் மற்றும் சம்பத் வங்கி
மேலும், ஹட்டன் நேஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
செலான் வங்கி
அதேசமயம், செலான் வங்கி வெளியிடப்பட்டுள்ள மாற்று வீதங்களின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316 ரூபாவாகவும், விற்பனை விலை 336 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
