டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 356.73 ரூபாவாகவும், கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 381.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 364.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 429.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 411.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கணிசமான அதிகரிப்பு

இந்த நிலையில், சில மணிநேரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.
தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாவின் மதிப்பு உயர்வடைகிறது.
ரூபாவின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri