இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 1.7 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு இந்த ஆண்டு பெப்ரவரி மாத முதல் வாரத்தில் 23.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, அந்நிய செலாவணி கையிருப்பு 400 டொலர்களினால் உயர்வடைந்துள்ளதாகவும் தற்பொழுது 2.1 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் உணவு பணவீக்கமானது கடந்த செப்டெம்பர் மாதம் 94.9 வீதமாக காணப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 60.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 29802ஆக காணப்பட்டதாகவும் இந்த ஆண்டில் அந்த தொகை 261 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது எனவும் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 107639 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார தீர்மானங்களின் காரணமாக இந்த சாதகமான மாற்றம் நாட்டில் பதிவாகியுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
