டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16.03.2023) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 329.02 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை டொலரொன்றின் விற்பனை பெறுமதி 346.33 சதமாக காணப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
