கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க அமெரிக்கா டொலர் முதலீடு
கடல்சார் வர்த்தகத்தில் செயல்திறனை மேம்படுத்தவும், தாமதங்கள் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக 17 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை அமெரிக்கா இன்று(16.10.2026) அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டம், துறைமுக செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் பங்கை வலுப்படுத்தவும் புதிய டிஜிட்டல் அமைப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய இந்த முயற்சி, பரஸ்பரம் இணைக்கப்பட்ட இரண்டு நாடுகளின் நலன்களையும் சார்ந்ததாக அமையும்.
துறைமுக செயல்பாடு
இந்த திட்டத்தின் ஊடாக, கப்பல் நிறுவனங்கள், சுங்க அதிகாரிகள், குடிவரவு அதிகாரிகள், துறைமுக இயக்குநர்கள் மற்றும் வணிகங்கள் தகவல்களை மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ள முடியும்.
இதன் காரணமாக, காகிதப் பணிகளைக் குறைக்கவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், சரக்கு செயலாக்கத்தை விரைவுபடுத்தவும் இந்த அமைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

துறைமுக செயல்பாடுகளை தாமதப்படுத்தக்கூடிய மற்றும் கப்பல் செலவுகளை அதிகரிக்கக்கூடிய காகித அடிப்படையிலான நடைமுறைகள் மற்றும் தொடர்பற்ற செயல்முறைகளுக்குப் பதிலாக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
அமெரிக்க அறிவிப்பின்படி, அமெரிக்க விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் மற்றும் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்கும்.