ஜனாதிபதியின் புதிய திட்டம்! நாட்டுக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்கள்
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை தயார்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி என வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கை
மேலும் கூறுகையில்,இதேவேளை புத்திசாலித்தனமான விவசாய நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB ) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த உடன்பாட்டை எட்டியுள்ளது என்று மேலும் கூறியுள்ளார்.
விவசாய முறைகள்
மக்களின் எழுச்சிக்கு மானியம் வழங்குவதல்ல, சுதந்திரமாக எழுந்து நிற்பதற்கான பலத்தை வழங்குவதே முக்கியம்.
காலாவதியான விவசாய முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டில் உள்ள விவசாயிகள் சமூகத்திற்கு நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.