டொலர் பிரச்சினையால் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ள 300 அத்தியாவசிய கொள்கலன்கள்
டொலா் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளா்களுக்கு கடன் கடிதங்களை வங்கிகள் விநியோகிக்காமைக் காரணமாகவே இந்த கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக சுங்கத்தின் பணிப்பாளா் மேஜா் ஜெனரல் ஜி.வி. ரவிப்ரிய தொிவித்துள்ளாா்.
இதன் காரணமாக துறைமுகத்தில் உள்ள பொருட்களை சந்தைப்படுத்தும் செயற்பாடுகள் தாமதமடைந்து வருவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை இலங்கையில் இறக்குமதிப் பொருட்களை இறக்கிக்கொள்வதில் வெளிநாட்டு நாணயப்பிரச்சனை எதிா்கொள்ளப்படுவதால், இறக்குமதியாளா்கள் தமது கப்பல்களை அயல்நாடுகளுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஏற்கனவே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்களை அகற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள முன்னணி இறக்குமதியாளர் ஒருவர் தொிவித்துள்ளாா்.
முன்னரைப் போன்றில்லாமல், இறக்குமதியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதில் அரச மற்றும் தனியார் வங்கிகள் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்காமையால், தாங்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பொதுவாக, முன்னா் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடன் வசதிகள் தரப்பட்டன.
எனினும் இப்போது வங்கிகளுக்கு உடனடியாக பணம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
