நோர்வே பெற்றுக் கொண்ட முஸ்லிம்களின் யுத்தப் பாதிப்பு ஆவணங்களை இலங்கையிடம் ஒப்படைக்கவில்லை : சட்டத்தரணி ஏ.உவைஸ் (Photos)

Sri Lanka Norway
By Rusath Feb 06, 2023 07:54 AM GMT
Report

முஸ்லிம் சமூகத்தைச் சந்தித்த நோர்வே அதிகாரிகள் முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக் கொண்ட இழப்புக்கள், பாதிப்புக்கள் பற்றிய ஆவணங்களை இன்னும் ஏன் இலங்கை அரசிடம் கையளிக்கவில்லை என றைஸ் ஸ்ரீலங்காவின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் செயலாளரும் சட்டத்தரணியுமான ஏ.உவைஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (03.02.2023) இடம்பெற்ற இலவச நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஈழப் பிரிவினைப் போர் காத்தான்குடி சமூகத்தின்மீது ஏற்படுத்திய பாதிப்புக்களும் கோரிக்கைளும்“ எனும் தொனிப் பொருளில் எழுதப்பட்ட இலவச நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றுள்ளது.

நோர்வே பெற்றுக் கொண்ட முஸ்லிம்களின் யுத்தப் பாதிப்பு ஆவணங்களை இலங்கையிடம் ஒப்படைக்கவில்லை : சட்டத்தரணி ஏ.உவைஸ் (Photos) | Documents On Muslim War Victims Obtained By Norway

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம்

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி உவைஸ்,

நோர்வேயின் கையில் உள்ள அந்த ஆவணங்கள் மீளக் கையளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் தற்போது முன் வைக்கின்றோம்.

சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்திருந்த ஐரோப்பிய நாடொன்றின் தூதரிடம் இது பற்றி முன் வைத்தோம். எங்களது கோரிக்கை நியாயமானது என்று அவரும் ஒப்புக்கொண்ட அதேநேரம் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு இதுபற்றிய வேண்டுகோளை முன்வையுங்கள் என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றார். அந்த நடிவடிக்கை தொடரும். இது ஒரு தொடக்கப் புள்ளிதான்.

இன்றைய கால கட்டத்தில் காத்தான்குடி சமூகம் அவர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் வேண்டி நிற்கின்றது. இந்தத் தாக்கத்தை எவ்வாறு ஈடுசெய்யலாம் என்பதுதான் அதன் நோக்கம்.

காத்தான்குடியில் ஏற்படும் பல்வேறு வகையாக பிரச்சினைகளின் மூலாதாரமாக இட நெருக்கடியும் காணிப்பிரச்சினையும்தான் முன்னிற்கின்றது என்பதை நாமறிவோம்.

நோர்வே பெற்றுக் கொண்ட முஸ்லிம்களின் யுத்தப் பாதிப்பு ஆவணங்களை இலங்கையிடம் ஒப்படைக்கவில்லை : சட்டத்தரணி ஏ.உவைஸ் (Photos) | Documents On Muslim War Victims Obtained By Norway

மக்களின் காணிப்பிரச்சினை

காணிச் சம பங்கு மறுக்கப்பட்டுள்ள இந்தச் சமூகத்திற்கு காணிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றபொழுது நெருக்குவாரப்படும் காத்தான்குடி சமூகத்தின் பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகள் தீரும்.

இங்கே ஏற்பட்டிருக்கின்ற சமூக, பொருளாதார, கல்வி சுகாதாரப் பிரச்சினை, விரக்தி, வேலையின்மை போதை வஸ்துப் பிரச்சினை என்பவை அடிப்படையில் காத்தான்குடி மக்களின் காணிப்பிரச்சினையை அதனை அடியொற்றியதாக ஏற்பட்டதேயன்றி வேறில்லை. எனவே இவை தேசிய சர்வதேச மட்டங்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு உள்ளது எங்களுடைய சகோதர சமூகம் எவ்வாறு அணுகி ஒத்துழைப்பு வழங்குன்றது என்பது நின்று நிதானித்துப் பார்க்கப்பட வேண்டும். சமதானம் ஏற்படுத்தப்படுகின்ற பொழுது அனைத்து சமூகத்தவரும் பேசுவதற்கான களம் அமைக்கப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சிவில் சமூகத்திற்கான திறந்த களம் அமைக்கப்பட வேண்டும். உயிர்த ஞாயிறுத் தாக்குதல் முஸ்லிம் சமூகத்தை உயிரற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டிருந்தது. காத்தான்குடி சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு களையப்பட வேண்டும் சமாதான யைம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், கர்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தவைலர் ஏ.எம்.எம். றவூப் அப்துல் மஜீத், றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நவாஸ் முஹம்மத் காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் நூல் விமர்சகரும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான ஸிறாஜ் மஷிர் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US