யாழ். பொது நூலகத்தின் கதையினை ஆவணப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்
தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் கதையின் ஏரியும் நினைவுகள் என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(29.05.2024) மாலை யாழ்ப்பாண பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
ஆக்கபூர்வமான கருத்துக்கள்
யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கதையினை ஏரியும் நினைவுகள் என்னும் கருப்பொருளில் ஆவணப்படத் திரைப்படத்தினை இயக்குநர் ப.சோபிதர்மன் இயக்கியுள்ளார்.
இதன்போது 1981ஆம் ஆண்டில் இருந்து 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண பொது நூலகம் ஏரியூட்டப்பட்ட போது ஏற்பட்ட அழிப்பு மற்றும் ஊரடங்கு சட்டத்தின் போது அங்குள்ள கடைத்தொகுதிகள் அழிப்பு மற்றும் கறுப்பு ஜூலை தொடர்பாகவும், பொதுமக்களின் இடப்பெயர்வுகளும் அழிவுகளும் தொடர்பான ஆவணபட மாக்கல் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களும் கேட்டறிந்து கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ம.ரகுராம், வேலன் சுவாமிகள், முன்னாள் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.இராதை, இலக்கியவாதிகள், தமிழ் சிவில் சமூக இளைஞர், யுவதிப் பிரதிநிதிகள், சான்றோர்கள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |