பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் 4 பேர் பலி
பாகிஸ்தான்- ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் ஈரான்(Iran) அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று முன்தின நள்ளிரவு முதல் நேற்று(29)அதிகாலை வரை தெஹ்சில் மஷ்கில் பச்சா ராய் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு
பலுசிஸ்தான் துணை இராணுவப் படை அதிகாரிகள், இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.
ஆனால், ஈரான் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காததோடு, ஈரான் படைகள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி ஈரான் வான்தாக்குதல் நடத்தியது.
அதற்கு பதிலடியாக ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பின்னர் இருநாடுகளும் இராஜதந்திரம் மூலமாக பதற்றத்தை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |