தனது சொகுசு விமானத்தை விற்ற டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிதி நெருக்கடியால் தனக்கு பிடித்த விமானத்தை விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானத்தின் மொத்த மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பைடனின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த நடக்கவுள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
அபராதத் தொகை
இந்நிலையில் சில மோசடி வழக்குகளில் ட்ரம்ப்க்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் அவர் தன்னுடைய தனி விமானம் ஒன்றை ஈரானிய - அமெரிக்க கட்டுமான நிறுவன தலைவர் மெஹர்தாத் மொயதியிடம் விற்பனை செய்துள்ளார்.
இந்த விமானத்தை 1997ஆம் ஆண்டில் டிரம்ப் வாங்கினார். இது மணிக்கு 1136 கி.மீ.வேகத்தில் செல்லும் திறன் மிக்கதுடன் வானில் 51 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் சொகுசு விமானம் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
