400 இற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்த வைத்தியர் குழாம்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, நானாட்டான்,மடு பிரிவுகளின் கால்நடைகளுக்கு வைத்தியர் குழாம் சிகிச்சையளித்துள்ளது.
இந்தநிலையில், வடக்கு மாகாண அரச கால்நடை வைத்தியர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு விசேட அணிகள் நேற்று(4) மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் அரச கால்நடை வைத்தியர்களுடன் இணைந்து மாகாணப் பணிப்பாளர் வசீகரனின் பணிப்புரைக்கு அமைய களமிறங்கியிருந்தனர்.
இதன் போது மேற்படி பிரிவுகளில் விடுமுறை நாள் என்றும் பாராது பண்ணையாளர்களின் துயர் துடைக்கும் விதமாக பாதிக்கப்பட்ட 400 ற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்ததுடன் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
சிகிச்சை
அத்துடன் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மூலம் கணிசமான உயிர்காப்பு மருந்துகளும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது.

மேலும், இறந்த கால்நடைகளுக்குரிய பதிவுகளையும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களும் வழங் கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சிகிச்சை முகாமுக்குரிய அனுசரணைகளை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்துடன் வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கமும் வழங்கியிருந்தது.






மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam