2027 வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு: தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ள வைத்தியர்கள்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய இரண்டு மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (23) தொழிற்சங்க நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2027 வரவு செலவுத் திட்டம் அரச வைத்தியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவில்லை எனக் கூறி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாடு முழுவதும் கிளைச் சங்கங்களின் அவசரக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நேரத்தில் வைத்தியர்கள் வழமையான கடமைகளிலிருந்து விலகுவார்கள் எனவும் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தொடரும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் எஞ்சிய கட்டங்களில் தீர்வுகளை அறிமுகப்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.