மலையகத்தில் வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நுவரெலியா - டிக்கோயா ஆதார வைத்தியசாலை, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா ஆகிய வைத்தியசாலைகள் வெறிச்சோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (13.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் இந்த பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள் முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
இந்நிலையில் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைகளில்
சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை
குறிப்பிடதக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
