கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் போராட்டம் நிறைவு : மருத்துவ சேவைகள் மீள ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று(22.01.2026) முதல் நிறைவுக்கு வந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று(22) நண்பகல் 2 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri