கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு.. ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா, அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பணிப்பகிஸ்கரிப்பு
இதன்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்ற கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அரச வைத்திய சங்கம் கடந்த 4 தினங்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியதுறையில் சீர்கேடு இருந்தால் வைத்திய நிர்வாகத்துக்கு உள்ளேயே கூடி ஆராய்ந்து அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் மக்களால் வைத்திய துறை அதிகாரிகளுக்கும் எந்த ஆபத்துக்களும் எந்த அசௌகரியங்கள் ஏற்படவில்லை எனவே வைத்திய அதிகாரிகளுக்குள் ஏற்படுகின்ற இவ்வாறான பிரச்சனைகளுக்கு நீங்கள் ஒன்று கூடி அதற்கான முடிவை எடுக்க வேண்டும் மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக் கூடாது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்றால் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மட்டும் போராடுவதே சிறந்தது வைத்தியர்களுக்கு போராடுவதற்கு உரிமை உண்டு எந்த வைத்தியசாலையில் பிரச்சனையே அந்த அந்த பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் போராட வேண்டும். இதைவிடுத்து கிழக்கு மாகாணம் தழுவிய போராட்டம் செய்ய கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பணிப்பகிஸ்கரிப்பில் டித்வா புயலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri