இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள்: சந்தேகம் வெளியிடும் மருத்துவர் சங்கம்
இந்தியாவில் (India) இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் இன்ஹேலர்கள் (Inhalers) என்ற உள்ளிழுக்கும் சாதனங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரியுள்ளது.
இந்நிலையில் உள்ளிழுக்கும் சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் மூச்சுக்குழாய் கலவைகளான ஸ்டெராய்ட்ஸ் (Steroids) மற்றும் ஸ்டாண்டலோன் ப்ரோன்கோடைலேட்டர்கள் (Standalone Bronchodilators) உட்பட மருந்துகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் ருக்சான் பெலன்ன கோரியுள்ளார்.
தரமற்ற மருத்துவப் பொருட்கள்
இதேவேளை இன்ஹேலர்கள் மூலம் வழங்கப்படும் மருந்துகள், தேவையான தரத்தை பூர்த்திசெய்கிறதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
கடந்த இரண்டு வருடங்களாக பல தரமற்ற மருத்துவப் பொருட்கள் இலங்கையில் (Sri Lanka) பதிவு செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனவே, ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படும் இன்ஹேலர்கள் குறித்து சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய விழிப்புடன் கண்காணிப்பை மேற்கொள்வது அவசியமாகும் என்று சங்கத்தின் தலைவர் ருக்சான் தெரிவித்துள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் உள்ளிழுக்கும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மருத்துவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையிலேயே பெலன்ன இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |