பல பில்லியன் ரூபா நாணயத்தை அழித்த இலங்கை மத்திய வங்கி
கடந்தாண்டு புழக்கத்துக்கு பொருத்தமற்ற சுமார் 80 பில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கி எரித்து அழித்துள்ளது.
கடந்த வருடம், மத்திய வங்கி நிர்ணயித்த நியமங்களுக்கு பொருத்தமற்ற 79.82 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டன.
மத்திய வங்கி கடந்த வருடம் 250 மில்லியன் புதிய நாணயத்தாள்களை பெற்றுள்ளது.
அதற்கமைய, 469.28 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத் தாள்களும் 571.95 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயங்களும் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.
நாணயத் தாள்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டில் நாணய சுழற்சி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக இருந்த பணப்புழக்கத்தின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டுக்குள் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, கடந்த ஆண்டு நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு 1,186.5 பில்லியன் ரூபாயாகும்.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan