வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தால் ஏற்பட்டுள்ள குழப்பம்
பேராதனை (Peradeniya) போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அர்ஜுன திலகரத்னவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறைபாடு செய்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.
குறித்த முறைபாட்டு கடிதத்தில் வைத்தியர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளதாவது,
"TCS/H/02/2020 X என்ற கடிதத்தில் உள்ள முக்கியமான பிழைகள் மற்றும் தெளிவின்மைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, இதற்கான உடன் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்னவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பல தவறான தகவல்கள் மற்றும் தவறான அறிக்கைகள் உள்ளன.
1. முகவரி மற்றும் உள்ளடக்கப் பிழை: கடிதம் "தற்காலிக இணைப்பு - என்னும் கடிதத்தில் பேராதனை போதனா வைத்தியசாலை - வைத்தியர் ஆர். அர்ச்சுனா" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வசனம், "நீங்கள் தற்காலிகமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாக இணைக்கப்பட்டுள்ளீர்கள்" என்று தெளிவற்ற முறையில் குறிப்பிடுகின்றது.
தற்போதைய பணிப்பாளரும் சிரேஷ்ட மருத்துவ நிர்வாக தர அதிகாரியுமான வைத்தியர் அர்ஜுன திலகரத்ன, மருத்துவ அதிகாரியாக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
இது அவரது தற்போதைய பதவியின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்த சொற்றொடர் தவறாகப் பரிந்துரைக்கிறது.
2. தவறாக எழுதுதல்:
இந்தக் கடிதம் எனது தற்காலிக பதவி நிலை குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |