2 ஆண்டுகளில் எத்தனை கோடி ரூபாவிற்கு மக்கள் முகக் கவசம் கொள்வனவு செய்துள்ளனர் தெரியுமா?
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் இரண்டாண்டு காலப் பகுதியில் பெருந் தொகை பணத்தை முகக் கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளனர்.
கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18000 கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் நாளாந்தம் முகக் கவசம் கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
எனவே முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri